கொவிட் 19 இலக்கங்கள் பற்றி உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புடன் இந்தியா அதிருப்தி.
உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கடந்த வாரம் வெளியிட்ட கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை பற்றி இந்தியாவுக்கும் அந்த அமைப்புக்கும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. உலகளவில் ஏற்பட்ட சுமார் 15 மில்லியன் மரணங்களில் மூன்றிலொரு பங்கு அதாவது சுமார் 4,7 மில்லியன் மரணங்கள் இந்தியாவில் ஏற்பட்டதாக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு வெளியிட்டிருப்பதைத் தாம் திட்டவட்டமாக மறுப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்திய அரசு கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கை உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு வெளியிட்ட இலக்கத்தின் பத்திலொரு மடங்கு என்றே சாதித்து வருகிறது. தமது கையில் நாட்டில் மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இருப்பதாகவும் அவைகளில் எத்தனை பேர் கொவிட் 19 ஆல் இறந்தார்கள் என்பதும் மிகத் தெளிவாக இருப்பதாகவும் கூறுகிறார் வினோத் குமார் பவுல், இந்தியாவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சின் உயரதிகாரி. உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு செய்திருப்பது போன்ற கணிப்பீடுகள் எதுவுமே இந்தியாவைப் பொறுத்தவரை செய்வது அவசியமில்லை என்று அவர் சாதித்து வருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்