தந்தையர் பெருமைகளை தந்தையர் தினத்தில் மட்டுமே பேச வேண்டுமா?
முன்னுரை:
இவ்வுலகில் அப்பா என்ற சொல் பேரின்பம் எனலாம். அதுவும் பெண் பிள்ளைகளுக்கு _வாழ்கையின் கதாநாயகன்_ எனலாம்.அப்பா தான் பெண் பிள்ளைகளின் முதல் காதல்❣️. அப்பா என்ற உறவு வாழ்வின் ஆதாரம்.
தந்தையர் தினம்:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜூன் 19 தேதி தந்தையர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தந்தையாரின் செயல்கள் :
குடும்ப நலனிற்காக தன்னையே ஈந்து உழைக்கும் ஒரே ஜீவன் தந்தை ஆவார். தாய் கூட சில சமயங்களில் உன்னை நான் 10 மாதம் பெற்று வளர்த்தேன் எனக் கூறுவாள். ஆனால் தந்தை நம்மை வாழ்க்கை முழுதும் சுமப்பார். ஒரு தடவை கூட அவர் வாயில் இருந்து அப்படி ஒரு வார்த்தை வராது. தந்தை நம்மை தோலில் தூக்கி வேடிக்கை காட்டுவார், எதற்காக? நான் காணாத இந்த உலகத்தை என் பிள்ளைகள் காண வேண்டும் என்ற நோக்கிலும் எண்ணத்திலும் தான். குடும்பம் என்ற கட்டமைப்பை தாங்கி பிடித்து அரணாய் காப்பது தந்தை தான். முன்பெல்லாம் தந்தை என்றால் சினிமாவில் கரடு முரடான நபராகத்தான் காட்டுவர். ஆனால் தற்பொழுது அதே சினிமாவில் தந்தையை தோழன் போல் காட்டுகின்றனர். கால மாற்றத்திற்கு ஏற்ப தந்தை, மகன் , மகள் உறவு மாறிவிட்டது. பிள்ளைகள் ஒரு விஷயம் செய்வதற்கு முன் தந்தை அதனை ஆராய்ந்து அதில் வரும் சிக்கல்களை அறிந்து பிறகு தான் கிணற்றுக்குள் கயிறை கட்டி இறக்கி விடுவது போல் அந்த செயலை செய்ய விட்டு காக்கின்றனர். தான் 10 மாதம் வயிற்றில் சும்மக்காத குறையை நெஞ்சிலும் முதுகிலும் தன் பிள்ளைகளை சுமந்து மகிழும் தந்தைக்கு இவ்வுலகில் ஈடு இணையே இல்லை, தந்தைக்கு நிகர் தந்தை. யார் வேண்டுமானாலும் கூறலாம் நான் உன் அப்பாவை போல் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆனால் ஒருபோதும் யாரும் தந்தைக்கு ஈடாக முடியாது. உலகின் உயர்ந்த உறவான தந்தையை போற்றுவோம். என் அப்பா நான் படிக்க வேண்டும் என்பதற்காக அவர் கடினப் பட்டு உழைத்து தான் படிக்க வைக்கிறார். ஆண் பிள்ளைகளுக்கோ ஓரளவு உலகம் தெரிய வந்த உடன் தன் அப்பாவையே வில்லன் போல் சித்தரித்து அப்பாவை தரக்குறைவாக பேசி அவமானம் படுத்துகிறார்கள். அந்த சமயம் அந்த தகப்பனின் மனம் என்ன பாடு படும் என ஒரு மகனும் அறிவதில்லை. அதற்கென எல்லா ஆன் மகனும் அப்படி கிடையாது. சில மகன்கள் தங்கள் தந்தையின் நிலையை புரிந்து தந்தை சொல் கேட்கும் மகன்களும் உள்ளனர். அப்படிப்பட்ட மகன்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் 💐💐💐💐. பெண்கள் வயதுக்கு வந்த பிறகும் எந்த அச்சமும் இன்றி தயக்கமும் இன்றி பேசும் ஒரே ஆண் தந்தை மட்டும் தான் என்பதில் சந்தேகம் இல்லை. என் தந்தை எனக்கு எப்பொழுதுமே என் வாழ்வின் கதாநாயகன் (ஹீரோ) தான் . என் தந்தையை நான் யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் விட்டுத் தர மாட்டேன் . என் வாழ்வின் ஏனிப் படி என் அப்பா தான். அப்பாவின் கவலை ஏராளம் . வெளியில் தான் சொல்ல முடியவில்ல. அம்மாவோ கஷ்டத்தை சொல்லி அழுது விடுகிறாள். தந்தை ஆண் என்பதால் அழக் கூட முடியாது. வெளியில் சிரித்து உள்ளுக்குள் அழுது ரண வேதனையை அனுபவிப்பான் தந்தை எனும் மகான் ஆவான்.
தந்தையை மதிப்போம் !!!!!!!
தந்தையை போற்றுவோம்!!!!!!!
தந்தையை நேசிப்போம்!!!!!!!
முடிவுரை :
நம்மை சிறுகுழந்தையில் பத்திரமாக பார்த்துக் கொண்ட தந்தையை நாம் அவர்களின் முதிர் காலத்தில் அவர்களை குழந்தைபோல் பார்த்துக் கொள்வோம். அதெல்லாம் ஓர் வரம். அதனை அனுபவி மனிதா!!!!!!!!!!!!
தந்தையை தந்தையர் தினம் அன்று மட்டும் போற்றாமல் எல்லா நாளும் கொண்டாடுவோம்.
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❣️
எழுதுவது:
இ. திவ்ய தர்ஷினி
இளங்கலைத் தமிழிலக்கியம் இரண்டாமாண்டு
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பண்டுதகாரன் புதூர் , மண்மங்கலம், கரூர் – 6