சௌத்தென்ட்டில் முத்தமிழ் விழா 2023
சௌத்தென்ட் முத்தமிழ் மன்றத்தினரின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா மிகச்சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை , 2023 சித்திரை 30 ம் திகதி அன்று THE SWEYNE PARK SCHOOL, SIR WALTER RALEIGH DRIVE, RALEIGH, SS6 9BZ மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழர் வீரக்கலைப் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் தமிழ்த் தேன்சுவை சொட்டும் நிழ்ச்சிகள் எதுவித நுழைவுக் கட்டணங்களும் இன்றி விருந்தோம்பலுடனும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வினைக் கண்டு மகிழ குடும்பத்தோடு வருகை தருமாறு அன்புரிமையுடன் ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றனர்.
எழுதுவது : டிலக்ஸி