தர்க்கத்தில் முதன்மை வகிப்பது யார்?
ஒரு அளவுக்குத் தான் அர்த்தத்துடன் வாதிடலாம் பிறகு ஆதிக்கப் பேச்சு வந்து விடும்.!
முன்னொரு காலத்தி்ல் ஜனக மகாராஜா வார்த்தை போட்டியிட சபையைக் கூட்டினார். இதில் மேதாவிகள், பிரம்ம ஞானிகள், ‘தர்க்க’ வாதத்தில் முதன்மையான ‘யாக்ஞவல்யர்’ உட்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெறுபவருக்கு
பொன்னால் அழகு படுத்தப்பட்ட நூறு
பசுக்கள் பரிசு.
தர்க்க வாதம் தொடங்கியது கேள்விக் கணைகள் வீசப்பட்டன. ‘யாக்ஞவல்யர்’ அனைவரையும் தோற்கடித்துக் கொண்டிருந்தார்.
தர்க்க வாதத்தின் ஒரு கேள்வியாக இந்த உலகை படைத்தது யார்? இதற்கு பதிலளித்த ‘யக்ஞவல்யர்’ பரமாத்மாவே என்றார். அனைவரும் ஒப்புக் கொள்ள இவருக்கு மனதில் சிறு கர்வம் எழத் தொடங்கியது.
தொடர்ந்து அடுத்த கேள்வியாக படைக்கப்படாமல் ஒரு பொருளோ, உயிரினமோ எப்படி உண்டாகும்.. சக்தி படைத்த மகான்களைக் கூட அவர்கள் தாயின் மூலமாகத் தானே பரமாத்மா படைக்கிறார்? அப்படி படைக்கப்டாத பொருளோ, உயிரினமோ இருந்தால் கூறுங்கள் என்றார் ‘யாக்ஞவல்யர்’. அந்த சபையில் அனைவருமே ஆண் மேதாவிகள், ‘கார்கி’ என்ற ஒருவர் மட்டுமே பெண்.
அந்தப் பெண் எழுந்து ‘யக்ஞவல்யரை’ பார்த்து மூவுலகிலும் சக்தி படைத்த அந்த பராமாத்மாவை படைத்தது யார்? எனக் கேட்டார். தன் வாதத்தாலேயே மாட்டிக் கொண்ட ‘யக்ஞவல்யர்’ இப்போது திகைத்தார்
அவரிடம் பதில் இல்லாததால் தனது சுயமரியாதையை காப்பாற்ற நினைத்து பதில் வாதத்தை திசை மாற்றி இப்படி பரமாத்மாவையே ஏளனப்படுத்திப் பேசிய உனது நாக்கு
அழுகிப் போகட்டும் என சாபமிட்டு கோபமாக சபையை விட்டே
வெளியேறினார்..
தொன்றுதொட்டு இந்தப் பழக்கத்தை ஆண்களிடம் இன்று வரை காணலாம். இதற்குக் காரணம் உண்டு. ஆண்களின் தர்க்க முறை வேறு, பெண்களின் தர்க்க முறை வேறு.
ஆண்களைப் போல் பெண்களின் தர்க்க முறையில் தொடர்ச்சி இருக்காது ஆனால் தாவல் இருக்கும். ஆண் ஒன்று சொல்ல பெண் வேறொன்றுடன் அதைத் தொடர்பு படுத்திப் பேசிவிடுவார்.
இதனாலேயே ஆண்களால் அதிக நேரம் பெண்களுடன் தர்க்கம் செய்ய முடிவதில்லை. சட்டென்று ஆண்களுக்கு கோபமம் வந்து விடுவதால் தாங்கள் ஆதிக்க வர்க்கம் என்ற நினைப்பை அது தூண்டிவிடுகிறது. வார்த்தைகளும் தடம் மாறி கடுமையாக வெளி வந்து
விடுகிறது.
இருப்பினும் வயது ஆக ஆக ஆண் மற்றும் பெண்ணிடையே தர்க்கம் புரியும் குணம் குறைந்து இனி மேல் பேசி என்ன பிரயோசனம்? என்ற ரீதியில் கொஞ்சம் கொஞ்சமாக தர்க்கம் புரிவது நின்றும் விடுகிறது. இறைவன் படைப்பில் பெண்ணிணுடைய சிந்தனை, உடல் இரசாயணம் எல்லாமே வேறுபட்டிருக்கும் போது அவர்களது தர்க்க விதிமுறை மட்டும்
எப்படி ஆண்களுடன் ஒத்துப் போக முடியும்?
ஆனால், ஆண்களிடம் பரிதாபப்பட்ட ஆண்டவன் ஒரு நற்செயலை செய்தான் ஆண்களை விட பெண்களுக்கு பொறுமையை கொடுத்து அதை தாய்மை குணத்தோடு கலந்தும் வைத்தான்.
எழுதுவது :
பிரமிளா நாகேஷ்வரராஜ்