மருந்துகளின் விலை குறைவடைகிறதா…?
ஜுன் மாதம் 26ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 60 விதமான மருந்துகளின் விலைகள் 16 சதவீதத்தால் குறைக்கப்படுகிறது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வெளியிட்டுள்ளார்.
பல நாட்களாக மருந்துகளின் விலைகள் அதிகளவில் அதிகரித்து வந்தன .இதன் காரணமாக மக்கள் பெருமளவில் அசௌகரியத்தை எதிர்நோக்கினர்.மருந்துகளின் விலை ஏற்றத்தால் சிறுவர்கள்,முதியவர்கள்,பெண்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அன்றாட உழைக்கும் வருமானத்தில் உணவு தேவையை பூர்த்தி செய்வதா மருத்துவ செலவை மேற்கொள்வதா என திண்டாடிய மக்களுக்கு இந்த விலை குறைப்பு ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது.
இதன் உச்ச பலனை அனைத்து பிரதேச மக்களும் அனுபவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.