மாவீரன் அழகு முத்துக்கோன் குரு பூஜை விழா
இந்தியா சுதந்திரமடைய பலர் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.அந்த வகையில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பீரங்கி முன் மண்டியிட மறுத்த நெல்லை சீமையின் கட்டாளங்குளம. மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் 266வது குரு பூஜை விழா தமிழ் நாடு முழுவதும் இடம் பெற்றது.
இதற்கமைய அழகு முத்துக்கோன் நல பேரவை அமைப்பினர் மற்றும் சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம் ஆகியன இணைந்து ஒதியதூர் கிராமத்தில் அழகு முத்துக்கோன் ஐயாவின் குரு பூஜை நிகழ்வு நடத்தப்பட்டது.
இதன் போது ஐயாவின் கல்வெட்டிற்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டது.
இதே வேளை கடலூர் மாவட்டத்திலும் மங்களூர் ஒன்றியத்தினால் பனையந்தூர் கிராமத்தில் ஐயாவின் கல்வெட்டு ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
மற்றும் மரக்கன்று நாட்டுதல்,இரத்த தானம் வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.இதன் போது அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர்.