சந்திராயன்-03 தற்போதைய நிலவரம்.
எல்லோராலும் வியந்து பார்க்கப்பட்ட சந்தியான் -03 தற்போது எவ்வாறான நிலையில் இருக்கிறது..ஆராய்ந்து பார்த்ததில் சில தகவல்கள் கிடைத்தன.
சந்திரயான் 3 (Chandrayaan 3) செயற்கைக்கோள் திட்டமிட்டபடி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) இன்று உறுதி செய்துள்ளது. அதாவது, இரண்டாவது சுற்றுவட்டப் பாதைக்கு சந்திரயான் 3 செயற்கைக்கோளை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை தற்போது சந்திரயன் 41,603 கிலோமீட்டர் x 226 கிலோமீட்டர் இருக்கிறது என்றும் இந்த சுற்றுவட்ட பாதையை மேலும் உயர்த்தும்பணி நாளை பிற்பகல் 2 மணிமுதல் 3 மணிவரை நடைப்பெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து சந்திரயான் -03 இணை விண்ணில் செலுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது.