மொபைல் போனுக்கு அடிமையாகும் சிறுவர்கள்..!
நேற்றைய தினம் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் மூலம் நாம் கண்டு கொண்டது என்ன ஒரே ஒரு தினத்தில மாத்திரம் சிறுவர்களை போற்றுவதும் ஆதரிப்பதும் மற்றைய நாட்களில் அவர்களை பாராமுகமாய் இருப்பதும் எந்த விதத்தில் நியாயம்?
முன்பெல்லாம் தமது முன்னோர்கள் அதாவது தாத்தா,பாட்டி கதை சொல்லுவார்கள் இப்போது அந்த ஒரு நிகழ்வே காணமல் போய் விட்டது என்று தான் சொல்ல தோன்றுகிறது.
தற்காலத்தில் சிறுவர்களிடம் மொபைல் போனை கொடுத்து விடுகிறார்கள்,அதன் மூலம் ஏதாவது ஒரு கேமை விளையாடட்டும் என்று விட்டு விடுகிறார்கள்.இவ்வாறு தான் இன்றைய பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
இதனால் பாதிக்கப்படுவது தங்களது பிள்ளைகளே என்பதை மறந்து விடுகிறார்கள்.அண்மையில் கூட 18 வயது நிரம்பிய மாணவன் மொபைல் பாவனைக்கு அடிமையாகி ,இருதி சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் கண்டித்ததன் காரணமாக கை,கால்களை வெட்டி கொண்டுள்ளார் ,காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய சாலை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.இவ்வாறான நிலைக்கு யார் காரணம் ?
பெற்றோர்கள் குழந்தைகள் மீது கவனயீனமே ஆகும்.குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதில்லை.அவர்களுடன் விளையாடுவதில்லை,மொபைல் போனை கொடுத்து விட்டு அவர்கள் அவர்களுடைய வேளையில் இருக்கிறார்கள்.
இவ்வாறான நிலையில் தான் இன்றைய பெற்றோர்கள் இருக்கிறார்கள் .இதனால் பாதிக்கப்படுவது சிறுவர்களே .
ஆகவே உங்கள் பிள்ளைகளை சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டியது உங்களது கடமையாகும்.ஆகவே உங்களது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.அவர்களுக்கு உறவுகளுடன் பேச கற்றுக்கொடுங்கள்,விளையாட கற்றுக்கொடுங்கள்,புத்தகம்,பத்திரிகை வாசிக்க கற்றுக்கொடுங்கள்.நேரம் பொண்ணானது ஆகவே சிறந்த முறையில பயன்படுத்துங்கள்.