இளைஞர்களும் மொபைலும்..!

இன்றைய கால இளைஞர் யுவதிகள் அதிகளவு அடிமையாகி இருக்கும் ஒரு விடயம் தான் மொபைல் போன்.இந்த மொபைல் போனை எதற்காக பயன்படுத்துகின்றோம் என்று தெரியாமலே இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் போனை பயன்படுத்துகிறார்கள்.

எதிரில் யார் இருக்கின்றார் ,நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் கூட மொபைலை பாவிக்கிறார்கள். இரவு முழுவது கண்விழித்து பார்க்கிறார்கள் இன்றைய நாள் தொடங்கி மறுநாள் காலை வரை அதாவது 3 மணி வரை மொபைலை பார்க்கிறார்கள். இளம் வயது இளைஞர்,யுவதிகள் தங.களுடைய நண்பர்கள்,காதலன், காதலி இப்படியான உறவுகளிலும் முகம் தெரியாத முகப்புத்தகம்.,இன்ஷ்டகிராம்,வட்சப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அறிமுமானவர்களிடமும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய அறையில் இருக்கும் மின் குமிழையும் அனைத்து விட்டு இருளில் மொபைலை பார்த்து msg chat ல் இணைந்திருக்கிறார்கள்.இதன் மூலம் மொபைலில் இருந்து வரும் கதிர்கள் நேரடியாக கண்ணினை தாக்குகின்றன. மறு நாள் காலையில் நித்திரையில் இருந்து எழும்பவும் முடியாமல் தமது கல்வி நடவடிக்கைகளை மேக்கொள்ளவும் முடியாமல் உடலுக்கு கஷ்டத்தை கொடுக்கிறார்கள்.

இவற்றை பெற்றோர்கள் கண்டு கொள்வதில்லை என்று தான் சொல்ல வேண்டும். தந்தையானவர் தொழிலுக்கு செல்பவராகவும் ,தாயானவர் தொலைக்காட்சி பார்ப்பவராகவும் இருக்கின்றார்கள் .இவர்களால் தமது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவதற்கோ,அவர்களை கண்காணிப்பதற்கோ, அவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கோ நேரமில்லாமல் இருக்கின்றது.

பெற்றோர்களே உங்கள் பிள்ளை தான் உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சொத்து.அவர்களுககாக உங்களுடைய பொன்னான நேரத்தை செலவிடுங்கள். மொபைலை எதற்காக எப்படி பயன் படுத்த வேண்டும் என கற்றுக்கொடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *