சூரிய சந்திர கிரகணங்கள் தோன்றும்…!
மண்
விளைவிப்பதின்
கீர்த்தனை.
ஒன்றை
ஆயிரம்
ஆக்கும்
வர்த்தமானம்.
அறுவடையின்
வசந்தம்.
காற்றின்
அசைவு
ஒவியம்.
கண்ணை
கவர்தலின்
பசுமை
தாகம்.
நீரோடையின்
ஆரவாரம்.
மண்புழுவின்
நேசம்.
இயற்கையின்
அருங்கருணை.
கனவு
நனவு
உறக்கம்
பேருறக்கம்
இவை
அனைத்திலும்
உறங்காத
விதைகள்.
விதைத்தவன்
மறந்தாலும்
விதைகள்
உறங்காது.
வளையல்
கரம்
விதைக்கும்
போது
ஆரவாரிக்கும்
விதைகள்.
அதன்
சப்தத்தின்
ஓசையில்
ஆகாயத்தின்
குரல்
ஒலித்து
சூரிய
சந்திரன்
ஒளி
கிரகணங்களை
வாரி
வழங்கும்.
இடி
மின்னல்
சத்தத்தில்
வேரினில்
நைட்ரஜன்
வளர்க்கும்.
பூமி
பந்தில்
மனித
உயிர்களை
போன்ற
உயிர்கள்
வாழும்
பிற
உயிர்வாழி
கோள்களில்
விதைகள்
நன்கு
வளர்ந்து
உணவு
உயிர்
வளர்க்கட்டும்.
மழைகளின்
மலைகளின்
சிநேகத்தில்
ஆண்
பெண்
ஆலாபனையில்
அர்த்தநாரீசுவரன்
மனம்
மகிழ்ந்து
நர்த்தனம்
ஆடட்டும்.
வளைகரத்தின்
நேசத்தில்
பாசத்தில்
கருணையில்
தேசத்தில்
சுபிட்சம்
தழைக்க
பாலகர்கள்
இளைஞர்கள்
அறிவில்
ஞானத்தின்
அனலில்
தகிக்க
வாழ்த்துக்கள்.
கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985