நிரம்பி நிற்கும் நில்வலா கங்கை..!
மலையகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகிறது.இதன் காரணமாக பல்வேறு ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன.
இதே வேளை நில்வளா கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்பாசன திணைக்களத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
நில்வளா கங்கையின் பானதுகம,தல்கஹாகொட போன்ற பகுதிகளில் சிறு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பானதுகம பிரதேசத்தின் நீர்மட்டம் 6.87 மீற்றராக உயர்ந்துள்ளதாகவும், நேற்று இரவு 8 மணியளவில் அதன் அளவு 6.85 மீற்றராக பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது 7.50 மீற்றராக உயர்ந்தால் பெரும் வெள்ள நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை கடந்த சில மாதங்களாக வறட்சி நிலவியதோடு ,விவசாயத்திற்கான நீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்கினர். இதன் காரணமாக பல போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.