காஸாவின் மீதான உடனடி படை எடுப்பிற்கு இயற்கை ஈடுகொடுக்க வில்லை…!
இஸ்ரேலானது காஸாவின் மீது தாக்குதல் நடத்திவருகிறது.இதன் காரணமாக பலர் உயிரிழந்தும்,பலர் தங்களது இடங்களை விட்டு வெளியேறியும் உள்ளனர்.
இந்நிலையில் காஸாவின் மீதான உடனடி தரைவழி படை எடுப்பின் மூலம் ஹமாஸ் போராளிகளின் தலைமையை அழித்து பாலஸ்தீனத்தை கைப்பற்ற உள்ளதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை காசாவின் எல்லையில் 35 பட்டாலியன்கள் உட்பட இஸ்ரேல் ஒரு பெரிய படையை குவித்துள்ளதாகவும், 300,000 துருப்புக்களுடன் 100 யுத்த டாங்கிகளும் காணபடுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வார இறுதியில் இஸ்ரேல் படையெடுப்பைத் தொடங்க திட்டமிட்டிருந்தது எனினும் இஸ்ரேலிய விமானிகள் மற்றும் ட்ரோன் ஒபரேட்டர்கள் படையினருக்கு விமான ஆதரவை வழங்க முடியாத வகையில்,மேகமூட்டமான நிலைமைகள் காணப்படுவதால் தாமதமானது என இஸ்ரேலிய தரைப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.