என் முதல் காதல்..!
என் முதல் காதல் ஈர்ப்புகளின்
மையல்.!
மையலின் சுகந்தம். காமம்
இல்லாத நெடுநல்வாடை.!
நேசமும் கவிதைகளும் பிணைந்த
குறிஞ்சிமலர்.
துருவங்கள் தீண்டாத உடல்மொழி.!
தண்டவாளங்களை போன்று
இணையாத தொடர்
பயணம்.!
காகிதங்கள் கவிதை கற்பனை மையினால்
ஓய்ந்தன.!
பாரதி தோற்றான். கண்ணதாசன் கெஞ்சினான். ஆனால் தமிழ் எனக்குள்ளும்
சிறகடித்தது.
காலம் தான் வித்தியாசம்.
பெண்களின் நேசம் பாசம்
அருகாமை வனப்பு காதல் இயற்கை அனைவருக்கும்
பொதுவானது.
நான் மட்டும் என்ன
விதிவிலக்கு. புகழ் இகழ்
கடவுளிடமிருந்து மனிதன் புனிதன் வரை தீ போல் இதயம் உருகி மெழுகு போல்
மீண்டும் உறையும்.
நீருக்கும் பனித்துளிகளுக்கும்
பனிகட்டி இவற்றிற்கும்
என்ன
ஒற்றுமையோ!
அதே போல் காதலில்
மனிதன் அசுரன் கடவுள் அனைவருமே பூஜ்யத்தில் ஆழ்ந்த ராஜ்ஜியமே!
கடவுள் மனிதன் அசுரன்
தத்துவவாதி கொள்கைவாதி
பகுத்தறிவுவாதி சந்நியாசி முனிவன் அரசன் இவர்கள்
எல்லாம் வென்ற தோற்ற இடங்கள் தன்
முதல் காதலில்.
இராமன் சீதையால் இராமாயணம். திரௌபதியால் மஹாபாரதம்.
அம்பிகாபதி
அமராவதி லைலா மஜ்னு
கிருஷ்ணன் ராதா இவர்கள்
எல்லாம் வென்றவர்கள்
தோற்றவர்கள்.
வாழ்வில் வாழ்க்கையில் நிஜத்தில் கற்பனையில்
வானவில்லின் ஆகாச தெளிவில் காதலால் ஊடுருவ
துளைக்க வதைக்க சிதைக்க
பட்டவர்கள்.
பட்டவர்களின் பண்டைய
வரலாறுகள் ஆயிரம்
அறிவுரை பகர்ந்தாலும்
விட்டாலும் விலகினாலும்
காதல் சொல்லப்படாத
துவந்த யுத்தம்.
சமர் இங்கு முகம் கார்கூந்தல்
விழி புருவம் புன்சிரிப்பு
குரல் தெத்துபல் நடை
உடை இடை காதல் மோகம் இயற்கை தென்றல்
ஒவ்வொருவனும் புதைந்து
விழுந்து சாக பிரம்மன்
படைப்பு.
திலோத்தமை படைத்து சிவனால் பிரமன்
அழிந்தான்.
இங்கு சுகமாக
அழிவதற்கு காதல்
கொள். இல்லை நீ
கொல்லப்படுவதற்கே!
அமையும் உன்
வாழ்க்கை.
அறிவாளி ஞானி பைத்தியம்
இதன் சிறு ஒளி ஒலி
அளவை காதல் காதலி
மட்டுமே.
கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985