இந்த நிறுவனத்தை யாராளும் மறக்க முடியுமா?
Nokia என்ற சொல்லை யாரும் அவ்வளவு இலகுவாக மறந்து விட முடியாது.
சர்வதே சந்தையில் ஒரு காலத்தில் தனக்கென தனித்துவமான இடத்தை பெற்றுக்கொண்ட முன்னோடியான நிறுவனம். வீட்டுக்கு வீடு nokia தொலைப்பேசிகள் தங்களது அதிகாரத்தை செலுத்தி வந்தன. அந்த காலம் ஒரு அற்புதமான பொக்கிஷ காலமாக தான் இருக்கும் அனைவரினதும் வாழ்க்கையிலும்,இன்று வரை எந்த மொபைல் கம்பனிகளாலும் அப்படி ஒரு சந்தோசமான தருணத்தை தந்து விட முடியாது.
2007 ஆம் ஆண்டின் இருதியில் வரை nokia மொபைல்கள் சர்வதேச சந்தை விற்பனையில் பாதி அளவாக இருந்தது.அதன் பிறகு 2010 ம் ஆண்டளவில் இந்நிறுவனமானது விற்பனை துறையில் பாரிய பின்னடைவை சந்தித்தது.
இதன் காரணமாக பல புதிய வடிவிலான மொபைல்களை உற்பத்தி செய்து இதர நிறுவனங்களுடன் சர்வதேச சந்தையில் போட்டி போடுகிறது.
இதே வேளை சவாலான சந்தை சூழலை எதிர்கொள்ள செலவுகளை குறைக்கும் நோக்குடன் ஒரு பகுதியாக இதில் பணிபுரியும் உழியர்கள் 14,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.