நாட்டுக்கு நாடு தீவிரமடையும் இதன் போக்கு..!
போதையும் இன்றயை
இளைஞர் களும் … ❗️
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
நாகரிகம் உச்சியிலே
நமது வாழ்க்கை
நாசமாச்சு
போதை எனும் மாய
மகிழ்ச்சியிலே… ❗️
பெற்றோர மதிக்கல
புத்தி சொன்னா புடிக்கல
நல்லது கெட்டது
தெரியல
படிச்சதொன்டும்
மண்டையில ஏரள…. ❗️
எடுத்து சொன்னதும் புரியல… ❗️
நல்லிரவு
நட்புக்கு
பிறந்தநாள் கொண்டாட்டம்
கொண்டு வந்த பீடியில
ஒரு புகைனான்
இழுத்ததினால் திண்டாட்டம்❗️
தேகத்துக்கு நல்லதென்று
நட்பு சொல்லக்
நாங்கேட்டு
சந்தோசம் அது வென்று
தந்ததெல்லாம்
இழுத்து விட்டேன்❗️
பீடி, சிகரட்டாச்சு
சிகரட் கஞ்சாவாச்சு
கஞ்சா ஐஸ் என்றாச்சு
ஐஸ்ஸே வாழ்வென்று
அடிமையும் ஆயாச்சு. ❗️
அஞ்சு பத்தாச்சு
பத்து நூறாச்சு
நுறு ஆயிரமாச்சு
ஆயிரத்தால் பணத்துக்கு
பஞ்சம் உருவாச்சு.. ❗️
கோழி முட்டையில
ஆரம்பிச்ச பொய் களவு
கொலை கொள்ளை
காமம்
ஆள் கடத்தல்
அடியாளாவும் மாறியாச்சு. ❗️
ஊர் உறவுகளை
ஏமாத்த எண்ணி
இறுதியில நின்னேன்
என்னை நான்
ஏமாத்தி… ❗️
சின்ன பிள்ளை போல
சீர்சிறுத்தப் பள்ளியில
சில காலம்
சிறைப்பட்டு
சிந்திக்கவும் முடியல
சுயமா இயங்கவும் தெரியல
சீரழிந்து போகிறது
இன்றைய இளைய சமுகம் .. ❗️
அ. அ. நவாஸ்.