19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண போட்டியை நடத்த இருந்த வாய்ப்பும் கை நழுவி போனது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இருந்தும் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றியுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஐசிசி வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் இணையத்தளம் Cricbuzz தெரிவித்துள்ளது.
தற்போது அகமதாபாத்தில் இடம்பெறும்
விரிவான ஆலோசனைக்குப் பிறகு, நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் இலங்கை கிரிக்கெட்டை இடைநிறுத்துவதற்கான முடிவை நிலைநிறுத்த வாரியம் முடிவு செய்துள்ளது.
இலங்கை அணி பங்கேற்கும் கிரிக்கெட் தடையின்றி தொடரும் என்றாலும், இடைநிறுத்தம் ரத்து செய்யப்படாது என்று வாரியம் தெரிவித்துள்ளது.
“இடை நிறுத்தத்தை நீக்க முடியாது என்பது icc வாரியத்தின் ஒருமித்த முடிவு. நாட்டில் கிரிக்கெட் வழக்கம் போல் தொடரும், என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.