பாலஸ்தீனத்தில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம்..!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 46 வது நாளாக போர் தொடுத்து வருகிறது.இதன் காரணமாக அங்கு வாழும் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகிறது.மேலும் உதவிகள் கிடைக்காமல் பெரும் அவஷ்தைக்குள்ளாகியுள்ளனர்.இவர்களுக்கு உதவிகளை வழங்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இதனிடையே கட்டாரானது இரு நாடுகளுக்குமிடையில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைய பணயக்கைதிகள் 50 பேரை விடுதலை செய்ய ஹமாஸ் போராளிகள் முன்வந்துள்ளனர்.
இதற்கமைய பாலஸ்தீனத்தின் மீதான போரை 4 நாட்களுக்கு நிறுத்தி வைக்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதே வேளை இஸ்ரேலிய சிறையிலிருந்தும் 150 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை 10 பிணைய கைதிகளை விடுவிக்க ஒரு நாள் என்ற அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமுல் படுத்தவும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலிய மந்திரி சபையும் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.