அணு உலை குளிர்விக்கும் கோபுரத்தில் குதித்து சாதனை..!
அணு உலை குளிர்விக்கும் கோபுரத்தில் குதித்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
21வயதுடைய தடகள வீரர் ஒருவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.இது தொடர்பாக அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் பெரசூட்டை தன் உடம்பில் கட்டி கொண்டு குறிப்பிட்ட பகுதிக்கு சென்று பார்வையிடுகிறார்.தொடர்ந்து குறிப்பிட்ட கோபுரத்தின் மேல்முனை பகுதிக்கு சென்று நின்றப்படி உள்ளே பார்க்கிறார்.பின்பு குதிப்பதற்கு தயாராகுகிறார்,பின்பு சட்டென்று கோபுரத்தின் உள்ளே குதிக்கிறார்.தரையை தொட சில தருணங்கள் இருக்கும் பொழுது பெரசூட்டை விடுவித்து தரையை அடைகிறார்.
இந்த காணொளியை ஜியோ மாஸ்டர் என்ற தனது இன்ஸ்டகிராம் கணக்கில் பதிவு செய்துள்ளார்.குறிப்பிட்ட காணொளியை 10.08 லட்சம் மக்கள் லைக் செய்துள்ளதுடன்,10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அணு உலை குளிர்விக்கும் கோபுரமானது 200 மீற்றர் வரைக்கும் அமையப்பெற்றது.இதில் நீர் குளிர்விக்கப்பட்டு காற்றில் வெப்பம் வெளியிட்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.