ஹமாஸின் போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தார் நெதன்யாகு..!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது கடந்த ஆண்டு முதல் தாக்குதல் நடாத்திவருகிறது.
இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் தமது அன்றாட வாழ்க்கையை இழந்துள்ளனர்.
இதனிடையே பாலஸ்தீனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போர் செய்யும் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்திருந்தது.இதனை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
இதே வேளை ஹமாஸ் அமைப்பினை முற்றாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படமாட்டாது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.