ஈரான் நோக்கி சென்ற கப்பல் மீது தாக்குதல்..!
ஈரான் நோக்கி சென்ற கப்பலை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரிஸ் நாட்டுக்கு சொந்தமான கப்பல் ஒன்று பிரேசிலில் இருந்து சோளம் உள்ளிட்ட பொருட்களை செங்கடல் வழியாக கொண்டு செல்லும் போதே ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக குறித்த கப்பல் சிறிய அளவில் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் போர் நடைப்பெற்று வருகின்ற சூழ்நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது