ஒலிம்பிக் தீபம் May 8 பிரான்ஸ்க்கு வரும்
உலகமே இந்த வருடத்தில் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், அதன் முக்கிய பாரம்பரிய ஒலிம்பிக் தீபம் வரும் மே மாதம் 8 ம் திகதி பிரான்ஸ் நாட்டுக்கு வரவுள்ளது.
கடந்த வாரத்தில் பாரம்பரியமாக ஏற்றப்பட்ட சுடர் , பாரம்பரிய முறைகளை தொடர்ந்தும் தாங்கியபடி பிரான்ஸ் நாட்டை வந்தடையும்.
கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் 2500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான ஹேரா ஆலயப் பகுதியில் சுடரை பாரம்பரிய முறைகளுக்கூடாகவே ஏற்றப்பட்டது.
ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம் வரும் 11 நாள்கள் கிரேக்க நாட்டை சுற்றி சுமாராக 5000 கிலோமீற்றர்கள் தூரம் அஞ்சலோட்டமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பிரான்ஸ்க்கு வரும்.
பிரான்ஸ் நாட்டுக்கு எடுத்துவரும் ஓட்டம் கூட , பிரான்ஸ் நாட்டின் பண்டைய பாய்மரக்கப்பலிலேயே எடுத்துவரப்பட உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 27 குறித்த Bellam எனப்படும் பாய்மரக்கப்பலில் ஏறும் ஒலிம்பிக் தீபம் 12 நாள்கள் கடல் வழியாக, பிரான்ஸின் தென்பகுதியான Marseille துறைமுக நகரை வந்தடையும் என குறிப்பிடப்படுகிறது.
மே மாதம் 8ம் திகதி குறித்த நகரம் பல லட்சக்கணக்கான மக்களால் வரவேற்கப்பட களைகட்டும் எனவும் எதிரவுகூறப்படுகிறது.
அதன்பின்னர் ஒலிம்பிக் 2024 இன் ஆரம்ப நாளான ஜூலை 26 ம் திகதி வரையில் பிரான்ஸின் சகல நகரங்களுக்கும் அஞ்சலோட்டமாக சுமார் 12 000 கிலோமீற்றர்கள் தூரம் ஓடி பாரீஸ் நகர தொடக்கவிழாவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.