நிர்கதியான ரபா நகர மக்கள்..!
நேற்று முன்தினம் முதல் இஸ்ரேலினால் ரபா நகரில் தரை வழி தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது.
பொது மக்கள் தஞ்சமடைந்த இடமான ரபாவில் பாரிய தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன.
இந்த தாக்குதலில் குறைந்தது 37 பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும். அவர்களில் பெரும்பாலோர் கூடாரங்களில் வாழ்கின்றவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை பிலடெல்பி காரிடார் எனப்படும் எகிப்துடனான காஸாவின் எல்லை முழுவதையும் கைப்பற்றுவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
டெய்ர் எல்-பாலாவில் ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பாடசாலை இப்போது 16,000 பேருக்கு அடைக்கலம் அளித்து வருகிறது.
இதே வேளை இடப்பெயர்வு நெருக்கடி தொடர்ந்து மோசமாகி வருகிறது. ரபாவிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள்,
நடைடைபாதையில் தூங்குவதற்கு அல்லது பாடசாலை வளாகத்தில் தற்காலிக பிளாஸ்டிக் தங்குமிடங்களை அமைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் ரபா நகரில் லிருந்து வெளியேறியுள்ளனர்,
இந்த அகதிகளில் பலர் பாதுகாப்புத் தேடி டெய்ர் எல்-பாலா அல்லது கான் யூனிஸுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலஸ்தீனிய சுகாதார அமைச்சின் தவல்களுக்கு அமைய
காசாவில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 36,224 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு மற்றும் 81,777 பேர் காயமடைந்துள்ளனர்.
பல பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும், மீட்பவர்களால் அணுக முடியாததாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டதுள்ளமை குறிப்பிடத்தக்கது.