பிரான்ஸிலும் பொது தேர்தலுக்கு திடீர் அழைப்பு
பிரான்ஸ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தலுக்கு தயாராகுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்சில் நடைபெற்று முடிந்திருக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரி தேசிய பேரணி வெற்றி பெற்றதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி, பிரான்சில் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய திகதிகளில் இரண்டு சுற்று வாக்குப்பதிவுகளாக இடம்பெறும் எனவும் மக்ரோன் மேலும் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரான்ஸ் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு பெரும் ஆச்சரியம் அளிப்பதாக அந்நாட்டின் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரான்ஸ் நாடே தயாராகும் இந்த நாள்களில்
ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்திருப்பது ஆச்சரியமளிக்கிறது எனவும் குறிப்பிடுகின்றனர்.
ஐக்கிய இராச்சியத்திலும் ஜூலை 4ம் திகதி பொதுத்தேர்தல் ஏற்பாடாகியிருக்கும் நிலையில் பிரான்ஸும் பொதுத்தேர்தலுக்கு தயாராகின்றது என்பது குறிப்பிடத்தக்கது