பிரான்ஸ் அரசு காலநிலை மாற்றங்களை தடுத்து நிறுத்த தான் போட்ட குறிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.

சமீப காலத்தில் பலமாக வளர்ந்துவிட்டிருக்கும் சுற்றுப்புற சூழ ஆர்வலர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்புகள் உலகக் காலநிலை மாற்றங்களைத் தடுத்து நிறுத்த பிரான்ஸ் அரசு தான் செய்வதாக உறுதியெடுத்தவைகளைச் செய்யவில்லை என்று வழக்குப் போட்டிருந்தார்கள்.

https://vetrinadai.com/news/france-environment-politics/

வழக்கின் தீர்ப்பு பிரெஞ்ச் அரசு காலநிலை மாற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதில் மிகவும் மெத்தனமாக இருந்து வருகிறது என்று தீர்ப்பளித்திருக்கிறது. வரப்போகும் ஆண்டுகளில் பிரான்ஸ் சுற்றுப்புற சூழல் பற்றிய விடயங்களில் கவனமெடுக்கவேண்டுமென்பதைச் சுட்டிக் காட்டும் அடையாளமாக இந்தத் தீர்ப்பு அமையும் என்று பலர் குறிப்பிடுகிறார்கள்.

அது மட்டுமன்றி பிரான்ஸ் குடிமக்கள் தமக்கு ஏற்பட்டிருக்கும் ஏதாவது சுகவீனம், குறைபாடுகளுக்கு அரசின் மெத்தனமே காரணம் என்று குறிப்பிட்டு ஆதாரங்களுடன் வழக்காடினால் அவர்களுக்கு அரசு நஷ்ட ஈடு கட்டவேண்டிய நிலைமையும் உண்டாகலாம். 

மின்சக்திப் பாவிப்பைச் சீர்செய்தல், சுற்றுப்புற சூழலைப் பாதிக்காத மீண்டும் பாவிக்கக்கூடிய இயற்கை வளங்களைப் பாவித்தலை ஊக்குவித்தல், போக்குவரத்தால் உண்டாகும் சூழல் மாசுபடுதலைக் குறைத்தல் ஆகியவைகளில் பிரான்ஸ் அரசு தான் போட்ட திட்டத்தையோ, கால அட்டவணையையோ நிறைவேற்ற முடியவில்லை. அவைகள் ஆரம்பத்தில் வேகமாக நடக்காவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றப்படும் என்று மக்ரோன் குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *