சொல்லிவிட்டாயே !|கவிநடை
பெண்ணே!
நீ வாசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
கவிதையாகி இருப்பேன்…..
நீ ரசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
சித்திரமாகி இருப்பேன்….
சுவாசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
காற்றாகியிருப்பேன்….
வாசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
நான் கவிதையாகி இருப்பேன
நேசிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால்
கணவனாகி இருப்பேன்……
நீ வெறுக்கிறேன் என்று
சொல்லிவிட்டாயே |
நான்
‘என்னாகப்போகிறேனோ….?
எழுதியது : கவிதை ரசிகன் குமரேசன்