இவர் பெயரை கண் இல்லாதவர்களும் சொல்வார்கள்..!
இது அரசியலுக்கு
அப்பாற்பட்டது…..
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
கலைஞர் நினைவு தின
சிறப்பு கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
இலக்கிய வானில்
எண்ணற்ற
விண்மீன்களுக்கு இடையில்
நீயோ சூரியன்…!
தமிழை பிரித்தால்
இயல்
இசை
நாடகம் என்று
மட்டும் வராது
கலைஞர் என்றும் வரும்….
இருப்பொருள்
படுமாறு எழுதுவது இரட்டைக்கிளவியால் தான்
முடியும்…..!
ஆனால்
இரண்டு பொருள்படுமாறு
பேசுவது
இந்த
ஒற்றைக் கிழவனால் மட்டுமே
முடியும்…..!
கர்ஜனையைக் கேட்டால்
சிங்கம் என்று
சின்னக் குழந்தையும்
சொல்வது போல்….
உன் குரலைக் கேட்டால்
கலைஞர் என்று
கண்ணில்லாதவனும்
சொல்வான்…..
வள்ளுவன் குறளால்
ஈர்த்து போல்
நீயும் எங்களை
குரலால் அல்லவா
ஈர்த்தாய்…..?
கதர்ச் சட்டை
போட்டவர் எல்லாம்
காமராஜர் ஆக முடியாது..
காக்கிச் சட்டை
போட்டவர் எல்லாம்
நேதாஜி ஆகமுடியாது….
தாடி வைத்தவர் எல்லாம்
தந்தை பெரியார் ஆகமுடியாது பேசுகிறவர்கள் எல்லாம்
பேரறிஞர் அண்ணா முடியாது
அது போலத்தான்
கருப்புக் கண்ணாடியும்
மஞ்சள் துண்டு
போட்டவரெல்லாம்
கலைஞராகவும் முடியாது…!
கரும்பாக
பேசுவது மட்டுமல்ல
குறும்பாக பேசுவதும்
உனக்கு மட்டுமே
கைவந்த கலை
கலையாகும்…
எல்லோரும்
கவிதைகளில்
வார்த்தைகளை
ஆட விடுவார்கள்….
ஆனால்
நீ மட்டும் தான்
விளையாட விட்டாய்….!
உனக்கு
வயதுதாக வயதாக
குறும்பு குறைந்ததோ என்னவோ
ஆனால்
உன் எழுத்துக்கு மட்டும்
ஏறிக் கொண்டேதான் இருந்தது…
தெய்வ நம்பிக்கையே
இல்லாத நீதான்
எத்தனையோ மனிதர்களுக்கு
தெய்வமாகிப்போனாய்…..
மூடநம்பிக்கைகளை
ஒழிக்கப் போராடிய
பெரியார் வழியில்
வந்த நீ ….!
கடைசி வரை
மஞ்சள் துண்டை
தோளில் சுமந்தது
எந்த நம்பிக்கையில் என்றுதான்
இன்று வரை
தெரியவே இல்லை…?
உனது பேனா…..
75 படங்களுக்கு வசனம்
15 நாவல்கள்
20 நாடகங்கள்
15 சிறுகதைகள்
210 கவிதைகள்
7000 மடல்கள் எழுதியதிலேயே
களைத்துப் போனது…..
நீ மட்டும் 94 வயது வரை
களைத்துப் போகாமல்
இருந்தது எப்படியோ……?
உனது
178 நூல்களை
பிரசவித்த
பிரசுரங்கள்கள் எல்லாம்
உன்னை பார்த்து
வியக்கின்றன
எட்டாவது அதிசயமாக….!
நீ எழுதிய
இலக்கியங்களே போதும்
கல் தோன்றி
மண் தோன்றா
முன் தோன்றிய
தமிழுக்கு
கல் அழிந்து
மண் அழியும் வரை…..!
நீ நடந்து வந்தபோது
தமிழன்
எழுந்து நிற்காமல் கூட இருந்திருக்கலாம்……
ஆனால்
நிச்சயம்
எழுந்து நின்றிருக்கும்
தமிழ்…….!!!
பக்கத்தில் இருந்தால் பாலும் புளிக்கும் என்பார்கள்
நீயோ 94 ஆண்டுகள்
எங்கள் பக்கத்தில் இருந்தாய்
புளிக்க என்ன
சலிக்க கூட இல்லையே….!!!
அரசியல்
உனக்கு
கிளைகள் என்றாலும்….
அந்தக் கிளைகள்
பரவுவதற்கு
இலக்கியங்கள்தான்
உனக்கு
வேராக இருந்தது என்பதை
யாராலும்
மறுக்கவும் முடியாது
மறக்கவும் முடியாது…..!
உனது இறுதி கவிதை தான்…
மெரீனா
கடற்கரையில்
கட்டப்பட்ட
உன் நினைவிடம்..!
வாழ்க உன் புகழ்…!
வளர்க உன் பெருமை….!
கவிதை ரசிகன்
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️