இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வருகை..!
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க மற்றும் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.இதன் போது அரசியல் பொருளாதார விடயங்கள் பற்றி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் எதிர்வரும் 21 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் பல கட்சி தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.