“உலகத்தை புரட்டி போட்டது “எது தெரியுமா..?
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ *எழுதுகோல்* *தினக் கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
பேனா
உறையில்
வைக்காத வாள்….
தோள்களில்
சுமக்காத ஏர்……
படித்தவர்கள் சொல்லும்
பணிகளை
கடமை தவறாமல் செய்யும் ஊழியன்….
காகிதத்தை
ஆயுதமாக மாற்றும்
கொல்லன்….
மனநிலத்தில்
புரட்சி விதைகளை
விதைத்து
வெற்றி தானியங்களை
அறுவடை செய்யும்
உழவன்…..
சில
கவிஞர்கள் கையில்
உளியாக……
பல
கவிஞர்கள் கையில்
ரோஜா மலராக…
படித்தவர்களின்
விரல்களுக்கு இடையில்
முளைத்த
ஆறாவது விரல்…..
உலகத்தையே
புரட்டிப் போடும் நெம்புகோல்….
படைப்பாளிகளையே!
படைக்கும் பிரம்மன்…
பலர்
தங்களுடைய
காயங்களையும்
கவலைகளையும்
கண்ணீராக வெளியேற்றுவார்கள்
சிலர்
இந்த பேனாவின் வழியே!
கவிதையாக
வெளியேற்றுகிறார்கள்……
இந்த எழுதுகோல்
சிலர் கையில்
செங்கோலாக இருக்கிறது
பலர் கையில்
கன்னக்கோலாக இருக்கிறது…..
வாள் முனையை விட
பேனாவின் முனை
கூர்மையானது தான்…..
ஆனால்….
அநீதிகளை அழிக்கப் பயன்படுத்தாமல்
நீதிகளை
கொலை செய்யவே பயன்படுத்துகின்றனர்….
இது ஒரு புரட்சிக் கொடி
ஆனால்
கட்சி கம்பத்திலேயே
கட்டப்படுகிறது….
இதை வைத்து
நாட்டையும்
நிமிர வைக்கலாம்…
இவர்கள்
வீட்டை மட்டுமே
நிமிர வைத்துக் கொள்கின்றனர்..
பணத்தைக் கடன் வாங்கி
ஏமாற்றியவர்களை விட….
இந்த எழுதுகோலை
இரவல் வாங்கி
எடுத்துக் கொண்டு போனவர்களே
ஏராளம்..ஏராளம்…
கல்வி நிலையங்களில்
நம்முடைய
முன்னேற்றத்திற்காக
ஆசிரியர்களை விட
அதிகம் உழைத்தது
இந்த எழுதுகோல் தான்….எழுதுகோல் தின நல்வாழ்த்துகள்....!!! *கவிதை ரசிகன்*
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️