கனடாவில் நிலநடுக்கம் பதிவு..!
கனடாவில் நேற்று அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நிலநடுக்கம் பதிவானது.இது ஹைடா குவாய் நகரில் 33 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்தது.இது ரிச்டர் அளவில் 06.05 ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்தன.
இதனை தொடர்ந்து அரை மணிநேரம் கழித்து மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 04.05 ஆக பதிவாகியுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கங்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.