புதிய ஜனாதிபதியின் வருகை..!
புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
இதன் பிறகு அமைச்சரவை தாமாக கலைந்து விடும்.அதன் பிறகு அநுர குமார திசாநாயக்கவின் எம்.பி பதவி வெற்றிடத்துக்கு புதிய எம்.பி ஒருவர் நியமிக்கப்படுவார்.
பின்னர் புதிய ஜனாதிபதி, புதிய எம்.பி உட்பட ஐவர் கொண்ட அமைச்சரவை நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை காபந்து அரசாங்கமாக செயற்படும்.
நாடாளுமன்ற தேர்தலில் ஆசனத்தை பெறும் ஆட்சியை அமைக்கும்.
முன்னால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளியேற்றப்பட்டதன் பின்னர் இக்கட்டான சூழ்நிலையில் ரணில் விக்ரம சிங்ஹ நாட்டினை பொறுப்பேற்றார்.அதன் பின்னர் ஓரளவு நாடு மீண்டு வந்தாலும் இன்னும் முழுமையாக மீளவில்லை, அன்ராட பொருளாதார சிக்கலில் இன்னும் மாட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
மாக்ஷிஷ கொள்கைகளுடனான புதிய ஜனாதிபதி பொருளாதாரத்தை கட்டி எழுப்ப எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறார் என்பதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.