வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் இனி இப்படி பெற்றுக்கொள்ள முடியும்..!
குவைத் ,ஜப்பான்,கட்டார்,அவுஸ்திரேலியா,கனடா,இத்தாலி, டுபாய் ஆகிய தூதரகங்களின் ஊடாக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் பிறப்பு,இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் நலன் கருதி வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் மூலம் இந்த சேவையை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கமைய முன்னோடியாக குறிப்பிட்ட 7 நாடுகளிலுள்ள தூதரகங்கள்,துணைதூதரகங்கள், பொது அலுவலகங்கள் ஊடக இந்த சேவையினை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.