மறைவற்ற வானவில்..!
🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍🩷 *பெண்ணே !* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍🩷
ஏய் பெண்ணே!
நீ என்ன
நடைபெற்ற சிற்பமா ?
இல்லை
நாணம் பெற்ற சித்திரமா?
உருவம் பெற்ற பூங்காற்றா?
இல்லை
பருவம் பெற்ற புதுநாற்றா?
மறைவற்ற வானவில்லா?
இல்லை
மாசற்ற தமிழ் சொல்லா?
உணர்பெற்ற வீணையா?
இல்லை
குளிர்ச்சி பெற்ற தீபமா?
அசைவு பெற்ற கோபுரமா?
இல்லை
விலைமதிப்பற்ற பொக்கிஷமா?
ஆடைப்பெற்ற சின்ன அருவியா?
இல்லை
அணிகலன் பெற்ற சிட்டுகுருவியா?
புன்முறுவல் காட்டும் சிலையா?
இல்லை
புடவை கட்டிய மழையா?
உறுதியாகச்
சொல்ல முடியவில்லை…..
உன்னை வர்ணித்து எழுதினால்
கவிதைக்கு முடிவே இல்லை….! *கவிதை ரசிகன்*
🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍