ஒற்றுமையின் மகிமை..!

✋✋✋✋✋✋✋✋✋✋✋ *விரல்கள்* *சொல்கிறது*

படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்

✋✋✋✋✋✋✋✋✋✋✋

✊நாங்கள்
ஒற்றுமையின் வலிமையை
உரக்கச் சொல்லும்
கூட்டுக் குடும்பங்கள்…

🤛உங்களுக்கே! தெரியும்
நாங்கள்
தனித்தனியாக
இருப்பதை விட
சேர்ந்திருக்கும் போது
அதிக வலிமையுடன்
இருப்போம் என்று…..

பிறகு ஏன்
நீங்கள் பிரிந்து வாழவே
பிரியப்படுகின்றீர்…..?

👉எனக்கு
“சுட்டு விரல்” என்று
பெயர் வைத்தீர்கள்
ஒன்றைச் சுட்டுவதற்கும்
பலரின் தவறுகளை
சுட்டிக் காட்டுவதற்கும்….

அது சரி…..
நீங்கள் தவறு செய்யும் போது
அதே விரலை
உங்களை நோக்கி
ஏன் நீட்டுவதில்லை….?

👍கலாய்ப்பதெல்லாம்
உங்களுக்கு
கைவந்த கலை….
இல்லையென்றால்
உணர்ச்சிகள் இருந்தும்
எனக்கு
“கட்டை” விரல் என்று
பெயர் வைப்பீர்களா…..?

உருவத்தில் என்ன
இருக்கிறது
குட்டையாக
நான் இல்லாவிட்டால்
நான்கு விரல்களும்
பலம் இழந்து விடும்….
நான் கட்டையாக
குட்டையாகப்
பிறந்ததற்காக
வருத்தப்படவில்லை..
நீங்கள் படிக்காமல்
என்னை கைநாட்டு வைக்க
பயன்படுத்தும் போது தான்
நான்
கூனி குறுகிப் போகிறேன்….

எனக்கு
💍”மோதிர விரல்” என்று
பெயர் வைத்தீர்கள்
ஆனால்
பணம் இருந்தால்
எல்லா விரல்களிலும்
மோதிரம் போடுகின்றீர்
சொன்னபடி என்று தான்
நடப்பீர்களோ ….?

🤟எனக்குச்
சுண்டு விரல் என்று பெயர்
வைத்தீர்கள்
அதுவரைக்கும் சந்தோசம்….
“மண்டு”விரல் என்று
பெயர் வைக்காமல் போனதற்கு….

✌️எனக்கு
நடுவிரல் என்று பெயர்
வைத்தீர்கள்
பல்பொடி இருந்த காலத்தில்
என்னைக் கொண்டு
பல் தேய்ப்பீர்கள்
பல் தேய்பான்கள்
வந்ததிலிருந்து
என்னையும் ஒதுக்கி விட்டீர்கள்
நன்றி கெட்ட உலகமடா…?

🤝எங்களைப் போல்
ஒற்றுமையாக வாழுங்கள்…
வாழ்க்கை
எங்களைப் போலவே
அரத்தமுள்ளதாகும்….!!! *கவிதை ரசிகன்*

✋✋✋✋✋✋✋✋✋✋✋

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *