ட்ரம்ப் ஆட்சியில் தமிழர்களுக்கு வாய்ப்பு..!
வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான அறிவியல் தொழிநுட்ப முது நிலை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஶ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மைக்ரோசொப்ட்,யாஹூ,பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.இவர் சென்னையிலுள்ள காட்டங்கொளத்தூரில் அமையப்பெற்றுள்ள தனியார் இன்ஜினியர் கலலூரியில் தனது பட்டப்படிப்பினை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் நிர்வாகத்தில தமிழர்களுக்கும் இடம் கொடுக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.