தண்ணீரின் நிலை என்ன?
💔💔💔💔💔💔💔💔💔💔💔 *ஆறாதக் காயம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔
பெண்
நீ என்னை
கைகழுவியது போல்
என் கண்ணில் உள்ள
உன் முகத்தை
கண்ணீரில் கழுவிப் பார்க்கிறேன்
போவதாகத் தெரியவில்லை…
உன்னிலிருந்து
என்னை பிரித்தபோது
எதுவும் மிச்சமில்லை…
கண்ணாடி ஜாடி
கைதவறி
கீழே விழுந்து
உடைந்த பிறகு
அதிலுள்ள தண்ணீரின்
நிலை என்ன?
உன்னைவிட
ஏமனே பரவாயில்லை
அவனை நம்பினேன்
என்னை கைவிடவில்லை…
என்னை
உன் உதட்டிலேயே
வைத்திருந்ததால்
உமிழ்ந்த விட்டாய்…
ஆனால் நானோ
உன்னை
என் இதயத்தில் அல்லவா
வைத்திருக்கிறேன்
என்ன செய்வேன்…?
பட்டுப்போன
என் வாழ்க்கை மரத்தை
காலக்கரையான்கள்
அரித்துக்கொண்டுள்ளன..
இறுகிப்போன
என் மனம்
உன் நினைவு
துருப்பேரிக் கிடக்கின்றது…
என் இதய வீட்டை விட்டு
நீ போனதால்
சோகச்சிலந்திகள்
வலைப் பின்னுகிறன…
சோலை வனமாக இருந்த
என் இளமை
நீ இல்லாமல் போனதால் பாலைவனமாய் ஆனதே!
உன் பிரிவு என்னும்
பள்ளத்தாக்கில்
விழுந்து கிடக்கிறேன் ….
அதிலிருந்து
வெளியேற
வழி தெரியாமல்….
தரைதட்டியதால்
கைவிடப்பட்டக் கப்பலாய்
என் வாழ்க்கை..!!! *கவிதை ரசிகன்*
💔💔💔💔💔💔💔💔💔💔💔