சுதந்திர தினம்- எழுதுவது கவிஞர் கேலோமி

வேண்டும்
விடுதலை
எனில்
இன்றைக்கு
நாம்
பெற்றது
எது?
ஏது?
அறம்
தவறியவனை
ஒழுக்கம்
குறைந்தவனை
சாதி
மதம்
இனம்
மொழி
என்று
பிரித்து
பழித்து
கூறி
பெரும்பானை
வயிற்றில்
வயிறு
வளர்க்க
கூவுபுவனை?
வெறும்
வெற்று
செல்வம்
சேர்க்க
பதவியில்
அமர
ஊழல்
இலஞ்சம்
பழிவாங்குதல்
தன்
குடும்பத்துக்கான
காட்சிகளை
மட்டும்
காலத்திற்கும்
திரையிடும்
கோமாளிகளை!
வீணான
சந்ததி
அடைகாக்கும்
ஈன
கோழிகளை?
என்
செய்ய?
சுதந்திரத்தின்
உதிரத்தை
கட்சிக்கு
தாரைவார்த்த
கயவாளிகளை
என்
சொல்ல?
சுதந்திரம்
அதன்
ஜீவன்
உயிரோடு
இருக்க
வரும்
தலைமுறை
அறம்
பழக
கற்றுக் கொடுப்போம்.
மது
போதை
காமம்
அடிமை கல்வி
கொள்ளை
ஊழல்
திருட்டு
புரட்டு
உருட்டு
இலட்சம்
இல்லா
நாடு
அமைப்போம்.
காப்போம்.
நீதி
நியாயம்
தர்மம்
சமத்துவம்
சகோதரத்துவம்
காப்போம்.
பெரும்
சொத்து
சேர்த்த
அரசியல்
கோமான்களை
அவர்கள்
சந்ததியை
கோமனான்டிகளாக
மாற்றுவோம்.
பாரதம்
இன்னும்
ஒர்
முறை
குருஷேத்திரம்
காணட்டும்.கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *