சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் பிரவேசிக்க முனைந்தவர்கள் கைது..!
மலேசியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயன்ற அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் கெடா மாகாண கடற் பகுதியில் அகதிகள் ஊடுறுவ முயற்சிப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில் கடலோர பொலிஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.இதன் போது 200 அகதிகளை ஏற்றிய இரண்டு படகுகள் கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து குறிப்பிட்ட படகில் இருந்த அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.