பதிவுகள்

நிழல்..!

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤 *நிழல்*

படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

எந்த வண்ணத்தில்
இருந்தால் என்ன
அது நிழலாக விழும் போது
எல்லாம் கருப்புதான்…. !

நீளம் தாண்டுதலில்
தங்கம் வென்றவராலும்
அவர் நிழலைத் தாண்ட முடியுமா?

நிழல்
ஒளி இருக்கும் இடத்தில் பருப்பொருளுக்கு
வெளியே இருக்கும்…..!
ஔிஇல்லாத இடத்தில் பருப்பொருளுக்கு
உள்ளே இருக்கும்…….

மேற்கூரை
ஓட்டில் இருந்தால் என்ன ?
ஓலையில்
இருந்தால் என்ன ?
அட்டையில்
இருந்தால் என்ன ?
காங்ரெட்டில்
இருந்தால் என்ன ?
நிழலில்
எந்த மாற்றமும் இல்லை……..!!!

மரத்தின் நிழலைப் போல்
மனிதனின் நிழல் இல்லை…

இரவின் மிச்சம்…..
ஒளியின் மச்சம்……..

நிஜத்துக்கு
அருகிலேயே இருந்தாலும்
இதில்
இருப்பதெல்லாம் பொய்யே!

விழுவதும்
ஒரு கலை தான் என்று
இது சொல்கிறது
இது விழவில்லை என்றால்
நமக்கு களைப்பு எப்படி நீங்கும்?

வெளிச்சம் வரைந்த
ஓவியம்…..

எத்தனை முறை விழுந்தாலும்
இது காயம் அடையாது….
இதைக்
காயப்படுத்தவும் முடியாது…..

நாம்
நிழலாக இருக்கும்
நிஜமா ?
நிஜமாக இருக்கும்
நிழலா ? *கவிதை ரசிகன்*

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *