ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் மரபுத்திங்கள் நிகழ்ச்சி
ஐக்கிய இராச்சியத்தில் முழுநாள் நிகழ்ச்சியாக தமிழ் மரபுத்திங்கள் நிகழ்ச்சியொன்று லண்டன் ஹரோவில் (London Harrow) ஏற்பாடு செய்யப்படுகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை , ஜனவரி மாதம் 12 ம் திகதி , Harrow இல் அமைந்திருக்கும் ,Harrow Byron Hall மண்டபத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்ச்சியானது ஐக்கிய இராச்சிய தமிழ் மரபுச்சமூகத்தினால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, மக்களை மகிழ்விக்கும் விதமான பல்வேறு நிகழ்ச்சிகளும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
உடனடி உணவு வழங்கல்கள், பொங்கல் விளையாட்டு பட்டறைகள்,நேரலைக்கண்காட்சிகள் என தமிழ் மரபுத்திங்களை பிரதிபலிக்கும் வண்ணம் காலை 11 மணியிலிருந்து விழா நடக்கும் என விழா ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் பல இளம் ஆற்றலாளர்களும் பங்குபற்றும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க, முற்றிலும் இலவசமான அனுமதியுடன் மக்கள் வரமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மரபுத்திங்களான தைமாதம், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் பல கொண்டாட்டங்களை முன்னெடுக்கத் தயாராகும் இந்தக் காலங்களில், லண்டன் மாநகரத்திலும் தமிழ் மரபுச்சமூகத்தினரால் இந்த மிகப்பெரும் நிகழ்ச்சி, சிறப்பாக ஏற்பாடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.