வட கொரிய வீரர்கள் சிறை பிடிப்பு-ஜெலன்ஸ்கி.
ரஷ்யா உக்ரைன் போர் ஆனது தொடர்ந்து நடைப்பெற்றுவரும் நிலையில் ரஷ்யாவிற்காக ரஷ்ய இராணுவத்தில இணைந்து போரிட்ட வடகொரிய வீரர்கள் இருவரை உகரைன் சிறைப்பிடித்துள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாவது,”வடகொரிய இராணுவ வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் பலத்த காயங்களுக்குட்பட்டுள்ளனர்.ஒருவரின் தாடையில் காயம் ஏற்பட்டுள்ளது.மற்றொரு இராணுவ வீரருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.சர்வதேச விதிகளுக்கமைய இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா என்ன செய்கிறது என்பதை உலகம் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்”.என்று தெரிவித்துள்ளார்.