மாணவியை கடத்தியதற்கான காரணத்தை வெளியிட்ட கடத்தி சென்றவர்..!
கடந்த சனிக்கிழமை தனது தோழியுடன் சென்றுக்கொண்டிருக்கும் போது மாணவி ஒருவர் கடத்தப்பட்டிருந்த நிலையில் ,குறித்த மாணவி இன்று காலை பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டார்.18வயதான குறித்த மாணவி கடத்தப்பட்டதை தொடர்ந்து இருவரையும் கைது செய்ய 5 பொலிஸ் குழுக்களை அமைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதோடு கடத்தலை மேற்கொண்ட இளைஞனின் கையடக்க தொலைப்பேசி தரவுகளை ஆராய்ந்த வேளை அம்பாரையில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அம்பாரை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. விரைந்து செயற்பட்ட அம்பாரை பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இன்று காலை அம்பாரையில் இருந்து கண்டிக்கு புறப்பட இருந்த சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்தில் குறித்த மாணவியையும் கடத்தி சென்றவரையும் பொலிஸார் கண்டுப்பிடித்தனர்.
இதனையடுத்து குறித்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன்,குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்குட்படுத்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகள் மேற்கொண்டதில் கடத்தி செல்லப்பட்ட மாணவி தனது மாமன் மகள் என்றும் ,இரண்டு வருடங்களுக்கு மேலாக தான் ஜப்பானில் பணிபுரிந்த வேளையில் தான் சம்பாதித்த பணத்தை தனது மாமாவிடம் கொடுத்ததாகவும்,ஆனால் குறித்த பணம் தனக்கு திருப்பி கிடைக்காத காரணத்தினால் இவ்வாறான செயலை செய்ததாக அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகள் நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.