05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!
மழையுடனான வானிலை தொடர்வதன் காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பதுளை,கண்டி,குருநாகல்,மாத்தளை,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே வேளை அதிக மழையுடனான வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.