கற்பனையாய் வடித்த சிலை..!

சிற்பி


சிற்பியின் முன் ஒரு வடிவம் இல்லாத கல்லாய் நான்

என்னை நானே செதுக்கிக்கொள்ள முனைகிறேன் முடியவில்லை

உளி கொண்டு கற்பனையாய் வடித்த சிலையானேன்

உளியின் வலிகளை மறந்து உருவமாக மாறினேன்

அடிமேல் அடி கொடுத்து உருவம் தந்த சிற்பியே

உன்னாலே நான் ஆனேன் சிற்பமாக

மலையின்
கல்லே என் தந்தையாக

உருவம் தந்த சிற்பியே என் தாயாக

பகட்டாய் ஒளிரும் முன்னறையில் திருதிருவென நிற்கும் உருவமோ

பட்டணத்து பெரிய வீட்டின் நடுவரையில் கம்பீரமாய் வீற்றிருக்கும் உருவமோ

பலரும் வணங்கும் கருவறையில் சாந்தமாய் அமர்ந்திருக்கும் தெய்வமோ

எதுவென்றாலும் வணங்கத்தக்க என்னை உருவாக்கிய சிற்பியே

உம்மை தலை வணங்குகிறேன் நான்
சிற்பமாக

குசி இந்திராணி
ஆவடி
சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *