இது ஒரு காந்த ஒளி..!
கதிரவன்
🔥💥🔥💥🔥💥
வெண்
சேலையைக் கிழித்து மெதுவாக சிரித்து
புல் தரையை நனைத்து
முத்தமிட்டு பனித்துளியை விரட்டி ஒளிவிட்டமாய் வட்டமிடும் கதிரவனே வருக வருக
நீ காலையிலே காந்த ஒளி தருக
அல்லி மலரை கிள்ளிப்பார்த்து மல்லிகை மொட்டை குட்டி எழுப்பி குளிர்ந்த நிலத்துக்கு தீயை மூட்டி தடாகத்தின் மேல் பள்ளி கொள்ளும் கதிரவனே வருக வருக
உன் வருகையால் கதிரும் பெருக பெருக

புலர்ந்து விட்டது பொழுதென சுருண்டு தூங்கும் மனிதர்களை எழுப்ப வரும் பகலவனே வருக வருக
உணவு தேடி பறக்கும் பறவைகளை கூட்டுக்கு விரட்ட நீ போடும் வித்தையிலே மேற்கு வானம் சிவக்க அந்தி நேரம் என்ற பெயரும் பிறக்க வருக வருக செங்கோணனே என் கவிதைக்கு நீயும் பொருளாய் வருக வருக
குசி இந்திராணி ஆசிரியர் ஆவடி சென்னை