பாகிஸ்தான் – பங்களதேஷ் இடையில் வர்த்தகம்..!
பாகிஸ்தான் பங்களதேஸ் ஆகிய நாடுகளிற்கிடையில் தற்போது வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முதல் முறையாக 50ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியினை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தான் தேசிய கப்பல் கழகத்தின் கப்பல் ஒன்று பங்களதேஸ் துறைமுகத்தை அடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது கடல் சார் வர்த்தக உறவுகளை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் ஓர் அங்கமாக பங்களதேஸ் இணைந்திருந்தது.1971ம் ஆண்டில் ஏற்பட்ட போர் காரணமாக பங்களதேஸம் தனிநாடாக மாறியது.