மொனராகலை வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

வெல்லவாய – மொனராகல வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொனராகலையிலிருந்து வெல்லவாய நோக்கி வந்த கார் ஒன்று எதிர்த் திசையில் பயணித்த சிறிய ரக குபோட்டா உழவு இயந்திரத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.