குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன் பதற்றமான சூழல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன் ஒரு பாரிய கூட்டம் வருகை தந்தமையினால் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்ற நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பலர் யூடியூப் சேனல் வைத்திருக்கும் லாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவர்களை சமாதானம் செய்துள்ளனர்.
இருப்பினும், வாக்குவாதத்தைத் தொடங்கிய நபர், பொலிஸாரிடம் நாங்கள் நாமல் ராஜபக்ஷவை ஆதரிக்க வந்த குழு அல்ல என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.