முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

தலைநகர் புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது,
“என்எக்ஸ்டி மாநாட்டில், எனது நண்பர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தேன். எங்களின் கலந்துரையாடல்களை நான் எப்போதும் எதிர் நோக்கியிருந்திருக்கிறேன். பல்வேறு பிரச்னைகளில் அவரது கண்ணோட்டத்தைப் பாராட்டினேன்”. என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் என்எக்ஸ்டி மாநாட்டில் பங்கேற்ற அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபாட்டையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் தெரிவிக்கையில், “எனது நல்ல நண்பரும், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமருமான டோனி அபாட்டை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எப்போதும் இந்தியாவின் நண்பர்“. என கூறியுள்ளார்.