மறந்து போன மட்பாத்திர சமையல்.!
என் வீட்டு மண் பாத்திர சமையல்
மண் பாத்திரத்தில்
சமையல் என்றாலே
எனக்கு நியாபகம்
என் பாட்டியின்
கையில சாப்பிட்டது என்பேன்
அப்படி சமைப்பது
உடம்புக்கும் நல்லதாக
அன்று என் பாட்டி, தாத்தா,காலத்தில்.
கொடுத்தார்கள்
இப்போது வரும் குழந்தைகளுக்கு நானும் அவ்வாறு
கொடுக்க வேண்டும்
இந்த தலைமுறையில் நாம் அவர்களுக்கு
அதன் பயன்களும், அதில் சாப்பிடும் சுவை பற்றி சொல்லி தர வேண்டும்.
மீன் குழம்பு, புளி குழம்பு, பருப்பு கிடைசல் என்று வித விதமா செய்து அந்த ருசி இப்போது எங்கு கிடைக்கிறது.
மண் பானைகளில் அரிசி, கொட்டி வைப்பது
புளி போட்டு வைப்பது இன்றும் ஒரு சில வீடுகளில் கடை பிடித்து வருகிறார்கள்.

மண் ஜாடிகளில் அலங்காரமாக பூ செடிகள்
வித விதமாக நிறைய மண் பானை அலங்காரமாக அடுக்கி வைத்து இருப்பார்கள் அதை பார்க்கும் போதே கண் கொள்ளா காட்சியாக இருக்கும்
இன்னும் நிறைய பண்டைய கால நாகரீகம் இல் இருந்து இன்றும்
மண் பானை அழியாத ஒரு பொக்கிஷம்
25/03/25
P.சத்தியவான் சாவித்திரி
ஈரோடு.