பலவந்த ஜனாஸா எரிப்பு தொடர்பான துஆப் பிரார்த்தனை

பலவந்த ஜனாஸா எரிப்பு அதன் 5 வருட நினைவு மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.
அதற்கமைவாக முஸ்லிம் அமைப்புகள் இணைந்து ஜம்மியத்துல் உலமா முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷேக் புர்ஹான் பஹ்ஜி தலைமை வகித்து பிரதான உரையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிணர் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். சுஹைர் முஸ்லிம் ஜனாஸா பலவந்த எரிப்பு பற்றி உரையாற்றினார்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்ஷேக் அர்க்கம் நூருல்லாஹ் , கவிதை கவிஞர் ரவூப் ஹஸீர், கலக்கிந்த தம்மலானந்த தேரோ, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், ஆங்கில கவிதை சப்னம் முசம்மில், துஆப் பிராத்தனை அஷ் ஷேக் அப்துல் ஹாலிக், நன்றியுரை அஷ்ஷேக் புர்ஹான் பஹ்ஜி நிகழ்த்தினார்கள்.
இவ் நினைவு தின வைபவத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் . சஜித் பிரேமதாச ரவூப் ஹக்கீம். பா.உ பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, கபீர் ஹாசீம், முஜிபு ரஹ்மான், மரைக்கார், பைசர் முஸ்தபா, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா உட்பட் முஸ்லிம் லீக், வை.எம்.எம். ஏ ,முஸ்லிம் மீடியா, முஸ்லிம் கவுன்சில், மேமன் தேசிய ஷூரா கவுன்சில், ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி, தரிக்கா சுப்ரீம் கவுன்சில், மலே சங்கம், கொழும்பு மாவட்ட மஜ்ஜிதிஸ்ட் பெடரேசன். சலாமா சொசைட்டி, கோஸ்லம், ஸ்ரீறிலங்கா முஸ்லிம் சிவில் சொசைட்டி, அல் சபாஹ், ஏஎம்.வைஎஸ், கவுன்சில் கொமினியுட்டி, முஸ்லிம் கவுன்சில் ஆகிய இந் நிகழ்வில் இணைந்து கொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை மீறி, கடந்த கொரோனா காலத்தில் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உடல்கள் கடந்த அரசாங்கத்தால் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டது.
இதனால், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமை பெரிதும் பாதிக்கப்பட்டது..
இதன் பொருட்டு, கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டனர்.
குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரார்த்தனை செய்யும் நினைவு தின நிகழ்வொன்று இன்று (06) கொழும்பு காலை 06 இல் அமைந்துள்ள மரைன் கிராண்ட் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்கள் நினைவாக ஓர் நினைவு பெயர் கொண்ட ஞாபகார்த்த கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்
எரிப்பு சம்பந்தமான ஈடுபாடு கொண்ட அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கி அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும்.
அத்துடன் நஷ்ட ஈடு பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். ஜநா. ஊடாகவும் இவ்விடயம் கொண்டுவரப்பட்டு மனித உரிமை மீறல் சர்வதேச சமூகத்தில் வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் கடந்த காலத்தில் இதற்காக பாராளுமன்றத்தின் உயர் நீதிமன்றத்திலும் மங்கள சமரவீர, எம். ஏ சுமந்திரன் , ரவூப் ஹக்கீம் , எதிர்க்கட்சித் தலைவர், முஜிபுர் ரஹ்மான் போன்ற ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இவ்விடயத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்படி நிவாரன சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பாடு பட வேண்டும். என அங்கு தீர்மாணங்கள் உரையாற்ற பட்டன.
